வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், உலகளவில் உயர்தர மின்னணு தயாரிப்புகளை போட்டி விலையில் வழங்கவும் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 24 FEB 2025 7:14PM by PIB Chennai

மேலும் நெகிழ்துதிறன் வாய்ந்த விநியோகச் சங்கிலிகள், தரத்தின் தரங்களை மேம்படுத்துதல் மற்றும் போட்டி விகிதத்தில் உலகிற்கு உயர்தர பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை நோக்கி இந்தியாவின் மின்னணு பொருட்கள் தொழில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்திய மின் மற்றும் மின்னணு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புதுதில்லியில்  நடைபெற்ற'எலெக்ராமா' 16-வது பதிப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். உற்பத்தியில் போட்டி ஆதாயங்களைக் கொண்டுவர பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நுகர்வோருக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோரை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தொழில்துறைக்கு உள்ளது என்று அமைச்சர் எடுத்துரைத்தார். பாதுகாப்புவாதத்தை கைவிட்டு, தொழில்துறையின் நலன்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் நலன்களை சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தொழில்துறை தலைவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் நுகர்வோரை பாதிக்கத் தொடங்குகிறது. வாடிக்கையாளர்களுடன் எம்.எஸ்.எம்.இ துறையின் நலன்களை சமநிலைப்படுத்துவது தொழில்துறையின் மிகப்பெரிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

2015-ஆம் ஆண்டில் 167 வது இடத்தில் இருந்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதி அளவு, 2025-ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அமைச்சர் கோயல் குறிப்பிட்டார். 2025 ஜனவரியில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி அளவு 3 பில்லியன் டாலராக இருந்தது. மின்சார பொருட்களுக்கான ஒரே நிறுத்த கடையாக இந்தியா மாற வேண்டும் என்று கூறிய அவர், அடுத்த ஏழு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தக ஏற்றுமதி இலக்கான 100 பில்லியன் அமெரிக்க டாலரை அடைய தொழில்துறையினரை வலியுறுத்தினார்.

மின்னணுப் பொருட்கள் தொழில்துறை கடந்த பத்தாண்டுகளில் அதன் பரிமாற்ற உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் மற்றும் நிறுவப்பட்ட திறன் ஆகியவற்றை இரட்டிப்பாக்கியுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் 1,800 உலகளாவிய திறன் மையங்களை (ஜி.சி.சி) அமைக்க அரசு உதவியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டெம் பட்டதாரிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்திற்கு தயாராக உள்ள தொழிலாளர் சக்தியை உருவாக்குவதையும், புதுமையை ஊக்குவிப்பதையும் அரசு  நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105880

 

***

RB/DL


(Release ID: 2105919) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi