பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
நாகாலாந்து பள்ளிகளில் மாணவிகளுக்காக 'வளரிளம் பெண்கள் மன்றம்' உருவாக்கப்பட்டுள்ளது
Posted On:
24 FEB 2025 4:02PM by PIB Chennai
வளரிளம் பருவம் என்பது பல்வேறு சவால்கள், வாய்ப்புகள் கொண்ட ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும். ஒரு தனிநபர், குழந்தைப் பருவத்தின் பாதுகாப்பான சூழலிலிருந்து, முதிர்வயதை அடைய முயற்சிக்கும் தருணம் இதுவாகும். இது தீவிரமான உடலியல் மற்றும் உளவியல் மாற்றத்தின் ஒரு கட்டமாகும். இதில் பதின் பருவத்தினர் மிகவும் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களை ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான நடத்தைகளுக்கு வழி நடத்தக் கூடும். எனினும், சரியான வழிகாட்டுதல் இருந்தால் இது அவர்களின் வலிமைகளையும் திறமைகளையும் ஆராய்ந்து, அவர்களின் கனவுகளை செயல்படுத்த உதவும்.
மகளிர் இயக்கத்தின் கீழ் முதலாவது வளரிளம் பருவப் பெண்கள் மன்றம், நாகாலாந்தின் வோக்காவிலுள்ள டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் 50 வளரிளம் பருவப் பெண்களுடன் தொடங்கப்பட்டது. 10 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இத்தகைய இளம் பருவப் பெண்கள் மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
தன்னம்பிக்கை மிக்க, தகவலறிந்த மற்றும் இரக்கமுள்ள தலைவர்களாக மாற்றுவதற்கு கல்வி, சுகாதார விழிப்புணர்வு, சமூக மற்றும் வாழ்க்கைத் திறன்களை கட்டமைப்பதன் மூலம் வளரிளம் பருவப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்வது இந்த மன்றத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105762
----
TS/IR/KPG/DL
(Release ID: 2105877)
Visitor Counter : 12