கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
17 நகரங்களில் நீர்வழிப் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறு குறித்து இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் ஆய்வு
Posted On:
21 FEB 2025 6:30PM by PIB Chennai
பல்வேறு நகரங்களில் நகர்ப்புற நீர்வழிப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் 196-வது கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 17 நகரங்களில் மெட்ரோ நீர்வழி போக்குவரத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்படுத்துவது குறித்த ஆய்வை மேற்கொள்ள கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி தற்போது பயன்பாட்டில் உள்ள நீர்வழிகளையும் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வலுவான மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை வழங்கும். இது வழக்கமான போக்குவரத்து முறைகளுக்கு மாற்றாக பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, அயோத்தி, கோவா, குவஹாத்தி, கொல்லம், கொல்கத்தா, பிரயாக்ராஜ், பாட்னா, ஸ்ரீநகர், வாரணாசி, மும்பை, மங்களூர், காந்திநகர், அகமதாபாத், ஆலப்புழா, லட்சத்தீவு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட 17 நகரங்களில் மெட்ரோ நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
நகர்ப்புற நீர் போக்குவரத்து அமைப்பானது பிற போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். மேலும் சுற்றுலா மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை இது ஊக்குவிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2105345
***
TS/GK/AG/DL
(Release ID: 2105402)
Visitor Counter : 18