கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச ஆவணக் காப்பக கவுன்சிலின் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியக் கிளையின் நிர்வாகக் குழு கூட்டம் இந்திய சர்வதேச மையத்தில் நடைபெற்றது

Posted On: 21 FEB 2025 5:11PM by PIB Chennai

சர்வதேச ஆவணக் காப்பக கவுன்சிலின்  தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியக் கிளை தலைவர்களின் இரண்டு நாள் நிர்வாகக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதைத் தொடங்கி வைத்தார். இந்திய தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் பிரதிநிதி காணொலி மூலம் பங்கேற்றார்.

இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தால் மேற்கொள்ளப்பட்ட காப்பகப் பதிவுகளின் டிஜிட்டல் மயமாக்கல் குறித்த நடவடிக்கைகளை இந்திய தேசிய ஆவணக் காப்பக இயக்குநர் திரு. அருண் சிங்கால் விளக்கமாக எடுத்துரைத்தார். 2017-ம் ஆண்டு கொழும்புவில்  கடைசியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது புதுதில்லியில் இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105300 

***

TS/GK/AG/DL


(Release ID: 2105362)
Read this release in: English , Urdu , Hindi