தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஆஷா சுகாதார பணியாளர்கள் கண்ணியத்துடன் பணிபுரிவது குறித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மையக் குழு சிறப்பு கூட்டம்
Posted On:
21 FEB 2025 11:54AM by PIB Chennai
‘ஆஷா சுகாதாரப் பணியாளர்கள் கண்ணியத்துடன் பணிபுரியும் உரிமையைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு. வி ராமசுப்பிரமணியன், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு ஆஷா பணியாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
முறையான கல்வி அறிவு இல்லாத போதிலும், திறமையான தொழிலாளர்களாக மாற முடியும் என்பதை ஆஷா பணியாளர்கள் நிரூபித்துள்ளதாகவும், பல படித்தவர்கள் இருந்தாலும், திறமையான தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பச்சிளங்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதற்கு ஆஷா பணியாளர்களின் சேவையே காரணம் என்று அவர் கூறினார்.
ஆஷா தொழிலாளர்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு. வி. ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிராமப் பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருத்துவர்களுக்கு முன்னதாக ஆஷா பணியாளர்களே முதலில் கவனம் செலுத்துகிறார்கள் என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105198
***
TS/GK/AG/KR
(Release ID: 2105221)
Visitor Counter : 22