அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மருந்து ஆராய்ச்சி குறித்த 9-வது சர்வதேச கருத்தரங்கின் இரண்டாம் நாள்
Posted On:
21 FEB 2025 11:35AM by PIB Chennai
லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில், மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சித் துறையின் தற்போதைய நிலைப்பாடு குறித்த 9-வது சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மருந்து ஆராய்ச்சி துறையில் புகழ் பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் புற்று நோய்க்கான சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி- டி செல் (CAR-T Cell) சிகிச்சை முறை குறித்து மும்பை ஐஐடி நிறுவன பேராசிரியர் ராகுல் புர்வார் விளக்கம் அளித்தார். புற்றுநோய் உலகளாவிய பிரச்சினை என்றும், இந்த நோய்க்கு உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி- டி செல் சிகிச்சை முறை புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான ஒரு அணுகுமுறை என்றும், விலை உயர்ந்த இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவருக்கும் இந்த சிகிச்சை கிடைக்கும் வகையில், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தற்போது நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் இந்த டி-செல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105196
***
TS/GK/AG/KR
(Release ID: 2105218)
Visitor Counter : 16