ஜல்சக்தி அமைச்சகம்
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் மற்றும் அர்க்யம் ஆகியவை நீர், துப்புரவு, தூய்மை (வாஷ்) பிரிவில் மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
प्रविष्टि तिथि:
19 FEB 2025 5:42PM by PIB Chennai
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவுநிறுவனம் மற்றும் அர்க்யம் ஆகியவை நீர், துப்புரவு, தூய்மை (வாஷ்) பிரிவுக்கான மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த முயற்சி மின்னணு தீர்வுகள் மூலம் நீர், சுகாதார சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சியுடன் ஒத்திசைவானதாக உள்ளது.
நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் ஆகியவற்றை ஆதரிப்பதற்காக மின்னணு சூழல் அமைப்பை வடிவமைத்து செயல்படுத்துவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர் வளங்களைப் பராமரிப்பதற்கு அரசு நிறுவனங்களை வலுப்படுத்தல், நிலையான நீர் மேலாண்மைக்கான பங்கேற்பு மின்னணு தளங்களை உருவாக்குதல் ஆகியவை கவனம் செலுத்தப்படும் முக்கியப் பகுதிகளாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104764
------
TS/IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2104817)
आगंतुक पटल : 66