பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, அசாமின் திப்ருகரில் உள்ள மான்கோட்டா அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டார்
प्रविष्टि तिथि:
18 FEB 2025 5:27PM by PIB Chennai
மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, அசாமின் திப்ருகரில் உள்ள மான்கோட்டா அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டார்.
இது குறித்து சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், திப்ருகரில் உள்ள மான்கோட்டா அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளுடன் உரையாடும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக கூறியுள்ளார்.
மற்றொரு 'எக்ஸ்' தளப் பதிவில், ஊட்டச்சத்து இயக்கம் 2.0 மற்றும் மாநிலத்தில் இணை ஊட்டச்சத்து திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
------
IR/KPG/KV
(रिलीज़ आईडी: 2104468)
आगंतुक पटल : 54