ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் 77-வது நிர்வாகக் குழு கூட்டம்- மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நாளை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்
Posted On:
18 FEB 2025 5:59PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் நாளை (19.02.2025) புதுதில்லியில் ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் 77-வது நிர்வாகக் குழு (EC-77) கூட்டத் தொடங்கி வைக்கிறார். நிர்வாகக் குழுவின் 77-வது அமர்வு இந்திய அரசின் ஆதரவுடன் 2025 பிப்ரவரி 19-20 தேதிகளில் புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இதில் ஆசியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்தியா சார்பில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
இக்கூட்டத்தில், 2025-2027-ம் ஆண்டுக்கு ஆசியா, ஆப்பிரிக்காவிலிருந்து தலா ஒரு தலைவரும் இரண்டு துணைத் தலைவர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்படும். இந்த அமைப்பு மற்ற அமைப்புகளுடன் கையெழுத்திட்ட 25 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும்.
ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் மாநாட்டிற்கு முந்தைய கூட்டமாக புதுதில்லியில் 77-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெறுகிறது.
ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பு (AARDO), 1962-ல் நிறுவப்பட்டது, இது அரசுகளுக்கிடையேயான பன்முக தன்னாட்சி அமைப்பாகும். இதில் ஆப்பிரிக்காவிலிருந்தும், ஆசியாவிலிருந்தும் 32 நாடுகளின் அரசுகள் முழு நேர உறுப்பினர்களாக உள்ளன.
***
TS/PLM/AG/KV
(Release ID: 2104465)
Visitor Counter : 25