கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
ஜோகிகோபாவில் உள்ள உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத்தை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
18 FEB 2025 5:30PM by PIB Chennai
ஜோகிகோபாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், அஜய், திக்ஷு ஆகிய இரண்டு படகுகளுடன் எம் வி திரிஷுல் கப்பல் மூலம் 110 மெட்ரிக் டன் நிலக்கரி மற்றும் ஜல்லி துகள்களை பங்களாதேஷுக்கு அனுப்பும் பணியை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த முனையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டியிருந்தார்.
பூட்டானில் உள்ள கெலேஃபுவிலிருந்து 91 கி.மீ தொலைவிலும், பங்களாதேஷ் எல்லையிலிருந்து 108 கி.மீ தொலைவிலும், குவஹாத்தியிலிருந்து 147 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளதால், இந்த முனையம் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இதுபங்களாதேஷ் மற்றும் பூட்டானுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தக உறவுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். 2027-ம் ஆண்டுக்குள், இந்த முனையம் ஆண்டுக்கு 1.1 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.வி. பத்மா II கப்பல், அஜய், திக்ஷு ஆகிய படகுகளுடன் 110 மெட்ரிக் டன் நிலக்கரியையும், எம்.வி. திரிசூல் ஜல்லி துகள்களையும் பங்களாதேஷுக்கு எடுத்துச் செல்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், “ஜோகிகோபாவில் உள்ள உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து முனையத்தை மக்களுக்கும் நாட்டிற்கும் அர்ப்பணிக்கும் இன்றைய தினம், நாட்டின் நீர்வழி போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104393
-----
TS/IR/KPG/KV
(Release ID: 2104446)
Visitor Counter : 19