ஜல்சக்தி அமைச்சகம்
நீர் பாதுகாப்புக் குறித்த மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் 2-வது மாநாட்டை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தொடங்கி வைத்தார்
Posted On:
18 FEB 2025 5:38PM by PIB Chennai
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா முன்னிலையில், நீர் பாதுகாப்புக் குறித்த மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் 2-வது மாநாட்டை பாரம்பரிய நீர்க் கலச விழாவுடன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய அவர், 2047-ம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தினார். இந்த இலக்கை அடைவதில் நீர் பாதுகாப்பு ஒரு முக்கிய தூணாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், 2047-ம் ஆண்டுக்குள் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கி இந்தியா செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தூய்மை இந்தியா இயக்கம் வாயிலாக, 12 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், 60 கோடி மக்களின் பழக்க வழக்கங்கள் மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேம்பட்ட சுகாதார நடவடிக்கை மூலம் 3 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதாரச் செலவுகளில் ரூ.8 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் 10 லட்சம் செயற்கை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுத்த நீர் பாதுகாப்பு முயற்சியை அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பு மூலம் 1.67 கோடிக்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104398
---
TS/IR/KPG/KV
(Release ID: 2104445)
Visitor Counter : 36