சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் வாக்கத்தான் 2025-ல் மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ பங்கேற்றார்
Posted On:
18 FEB 2025 5:04PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தில் உள்ள நவாப் மன்சூர் அலிகான் பட்டோடி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற ஹஜ் வாக்கத்தான் 2025-ல் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். தில்லி பிரதேச ஹஜ் குழு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. புனித ஹஜ் பயணத்திற்கு யாத்ரீகர்கள் தயாராவதற்கான உடல் தகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
யாத்ரீகர்கள் தங்களின் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில், அவர்கள் உடல் நலத்தோடும், உடல் தகுதியோடும் இருப்பது அவசியம் என்பதை திரு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தினார். மெக்காவிலும், மெதினாவிலும் வெப்ப நிலை மிக அதிகமாக இருப்பதை அடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் உடல் தகுதிக்கு தில்லி ஹஜ் குழுவின் தலைவர் திருமதி கௌசர் ஜஹானும், அதன் உறுப்பினர்களும் உரிய முக்கியத்துவம் அளிப்பதாக அமைச்சர் கூறினார்.
***
(Release ID: 2104379)
TS/SMB/RR/KR
(Release ID: 2104412)
Visitor Counter : 14