சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
‘கழிவு மறுசுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் 2025’ என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்
Posted On:
18 FEB 2025 3:43PM by PIB Chennai
‘கழிவு மறுசுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் 2025’ என்ற தலைப்பில் இந்திய மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் தொழில்துறை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் மாநாட்டை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர், “நாட்டில் பிளாஸ்டிக், மின்னணு பொருட்கள், அபாயகரமான பொருட்கள் ஆகியவற்றின் கழிவு ஆண்டுதோறும் சுமார் 62 மில்லியன் டன் அளவிற்கு உருவாகுவதாகக் கூறினார். குப்பைக் கிடங்குகள் மீது அதிகரித்து வரும் அழுத்தம், இயற்கை வளங்கள் குறைதல் மற்றும் அதிக அளவிலான கழிவுகளை கண்காணிக்காமல் அகற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு ஆகியவற்றிற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுழற்சிப் பொருளாதாரம் ஒரு மாற்றாக அல்லாமல் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். பொருட்களை உற்பத்தி செய்தல், நுகர்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் சுழற்சிப் பொருளாதாரம் ஒரு அடிப்படை மாற்றத்தைக் குறிக்கிறது" என்று அவர் கூறினார். முறையாகப் பயன்படுத்தப்படும் சுழற்சிப் பொருளாதாரம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தொழில்துறை கண்டுபிடிப்பு, பொருளாதார போட்டித்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் வளர்ச்சி அடையச் செய்கிறது என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், கழிவிலிருந்து செல்வம் என்ற முன்னெடுப்பு மூலம் கழிவு மேலாண்மையிலிருந்து மறுசுழற்சியின் சாத்தியமான பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்துவதை நோக்கி இந்தியா மாறுவதாக திரு யாதவ் குறிப்பிட்டார். "எதிர்காலத்தில் கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றில் சுழற்சிப் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் திரு பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104349
---
TS/IR/KPG/KR
(Release ID: 2104410)
Visitor Counter : 32