வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜெர்மனியில் இயற்கை வேளாண் ஏற்றுமதி பொருட்களின் பயோஃபாக் கண்காட்சி – இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 FEB 2025 3:19PM by PIB Chennai
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA), 2025 பிப்ரவரி 11 முதல் 14 வரை ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் உள்ள மெசெசென்ட்ரமில் நடைபெற்ற பயோஃபாக் 2025 (BIOFACH 2025) கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த இந்திய அரங்கில் இந்திய ஏற்றுமதியாளர்களின் பொருட்களைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்திருந்தது. மியுனிச்சில் உள்ள இந்தியத் தூதர் திரு சத்ருக்னா சின்ஹா, அபேடா தலைவர் திரு அபிஷேக் தேவ் ஆகியோரால் இந்திய அரங்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த உலகளாவிய நிகழ்வில் இந்தியா கவனத்தை ஈர்க்கவும், பயோஃபாகா 2026 இல் உலகிற்கான கரிம உணவுக் கூடையாக இந்தியாவின் வலிமையை முன்வைக்கவும் இது மேடை அமைத்து தந்தது.
இந்த ஆண்டு நிகழ்வில் இந்திய அரங்கில் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கரிம பொருட்கள் (இயற்கை வேளாண் பொருட்கள்) காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சி இந்தியாவின் விவசாயத் திறமையை எடுத்துக்காட்டியது மட்டுமல்லாமல், இந்தியாவின் இயற்கை வேளாண் பாரம்பரியம் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது.
***
(Release ID: 2104332)
TS/PLM/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2104362)
வருகையாளர் எண்ணிக்கை : 68