இந்திய லோக்பால் அமைப்பு
இந்திய லோக்பாலின் உள்ளீடுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி- ஒருங்கிணைந்த லோக்பால் திட்டம் 2021 என்பது, ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டம் 2021 என்று அழைக்கப்படும்
Posted On:
17 FEB 2025 6:04PM by PIB Chennai
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013, சில பொது ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது தொடர்பான விஷயங்களை விசாரிக்க மத்திய அரசிற்கு லோக்பால் மற்றும் மாநிலங்களுக்கு லோக் ஆயுக்தா என்ற அமைப்பை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், 16.01.2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2013 ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 3 இன் படி நடைமுறைக்கு வந்ததன் மூலம் நிறுவப்பட்ட ஒரு அமைப்புக்கு பிரத்தியேகமாக 'லோக்பால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் புகார்களை இலவசமாக நிவர்த்தி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி 2021-ஆம் ஆண்டில் 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த ஆம்பட்ஸ்மேன் திட்டம், 2021' ஐ அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, இந்தத் திட்டம், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது, 'ரிசர்வ் வங்கி- ஒருங்கிணைந்த லோக்பால் திட்டம்' என்று படிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் திட்டத்தில் 'லோக்பால்' என்ற வார்த்தையின் பயன்பாடு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 இன் விதிகளுக்கு முரணானது, ஏனெனில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013 நடைமுறைக்கு வந்த பிறகு 'லோக்பால்' என்ற சொல் லோக்பால் என்று அழைக்கப்படும் சட்டப் பிரிவு 3 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பைக் குறிக்கிறது.
எனவே, திருத்த நடவடிக்கைகளை எடுக்கவும், 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் (ஆம்பட்ஸ்மேன்) திட்டம், 2021' என்று மறுபெயரிடவும், அதன் குறைதீர்ப்பாளர் திட்டம் தொடர்பான பிற அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் உடனடியாக மறுபெயரிடவும் இந்த விஷயம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொண்டு செல்லப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி இப்போது 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த ஆம்புட்ஸ்மேன் திட்டம், 2021' இன் இந்தி பதிப்பில் 'லோக்பால்' என்ற வார்த்தையை 'ஆம்பட்ஸ்மேன்' என்ற வார்த்தையாக மாற்றியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104142
-----
RB/DL
(Release ID: 2104227)
Visitor Counter : 20