அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை திரிபுரா முதலமைச்சர் சந்தித்தார்
Posted On:
16 FEB 2025 6:40PM by PIB Chennai
திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று (16.02.2025) மத்திய அறிவியல், தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார்.
மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு, நிர்வாக விஷயங்கள், மூங்கில் தொழிலை ஊக்குவித்தல் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விவாதித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி - பங்களாதேஷ் இடையேயான இணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
திரிபுராவில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக 500 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ததால், மேம்பட்ட முன்னறிவிப்பு மற்றும் பேரழிவு தயார்நிலைக்கு தொழில்நுட்ப ஆதரவை முதலமைச்சர் கோரினார். புவி அறிவியல் அமைச்சகம் ஓராண்டுக்குள் மாநிலத்தில் அதிநவீன வானிலை ரேடார் ஒன்றை அமைக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் உறுதியளித்தார்.
***
PLM/KV
(Release ID: 2103846)
Visitor Counter : 27