நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வயல் பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்த ரூ 170 கோடி மதிப்புள்ள சிஎஸ்ஆர் திட்டங்களுக்கு ஒப்புதல்
Posted On:
15 FEB 2025 5:51PM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல் இந்தியாவின் சத்தீஸ்கரை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் , 24-25 நிதியாண்டில் பல்வேறு பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கு ரூ 170 கோடியை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சிகள் நிலக்கரி வயல் பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்பை கணிசமாக அதிகரிக்கும்.
இந்த ஒதுக்கீடு 24-25 நிதியாண்டிற்கான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ சிஎஸ்ஆர் பட்ஜெட்டான ரூ 99.76 கோடியை விட அதிகமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. இந்தத் திட்டங்கள் அடுத்த 2-3 ஆண்டுகளில் அந்தந்த ஒப்பந்தங்களின்படி செயல்படுத்தப்படும்.
இந்த திட்டங்கள் சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் முழுமையான சமூக மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. ஒரு முக்கிய முயற்சியில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 500 படுக்கைகள் கொண்ட பெண்கள் விடுதி' கட்டுவதற்காக, ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ரூ 48.19 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பெண் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கைச் சூழலை வழங்கும், பெண்கள் மத்தியில் உயர்கல்வியை ஊக்குவிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103573
***
PKV/KV
(Release ID: 2103630)
Visitor Counter : 27