அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர், இந்தியாவில் தகவல் தொடர்பு அறிவியலின் முக்கியத்துவம் குறித்த ஒரு நாள் பயிலரங்கை நடத்தியது
Posted On:
15 FEB 2025 5:18PM by PIB Chennai
அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய அறிவியல் தொடர்பு - கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NISCPR,சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர்) புது தில்லியில் உள்ள அதன் வளாகத்தில் 'தகவல் தொடர்பு அறிவியலின் தேவையும் முக்கியத்துவமும்' குறித்த ஒரு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது. இந்திய மொழிகளில் அறிவியல் தகவல் தொடர்பில் தற்போதுள்ள முன்முயற்சிகளை மதிப்பீடு செய்வதும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளில் அறிவியலுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான உத்திகளை ஆராய்வதும் இந்த பயிலரங்கின் நோக்கமாகும்.
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் தமது வரவேற்புரையில் அறிவியல் ஆராய்ச்சிக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் அறிவியல் தகவல்தொடர்பின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். பிராந்திய மொழிகளில் அறிவியல் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், உண்மையான அறிவியல் முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கியது என்றார்.
இந்த பயிலரங்கில் பல்வேறு அறிவியல் ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொற்களுக்கான ஆணையத்தின் உதவி இயக்குநர் தீபக் குமார், 'அறிவியல் கலைச்சொற்களின் தற்போதைய இயல்பு, சிக்கல்கள் பயன்பாடு' என்ற தலைப்பில் கருத்து பேசினார்.
வல்லுநர்கள், தகவல் தொடர்பாளர்கள், பங்கேற்பாளர்கள் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை நடத்த இந்த பயிலரங்கம் ஒரு ஆற்றல்மிக்க தளத்தை வழங்கியது. இந்த விவாதங்கள் இந்திய மொழிகளில் அறிவியல் தகவல்தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான கொள்கை பரிந்துரைகளை வழங்கியது. கல்வி-அரசு-ஊடக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் அமர்வு, கேள்வி பதில் அமர்வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
***
PLM/KV
(Release ID: 2103614)
Visitor Counter : 23