இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட், ஸ்மார்ட் வில்லேஜ் மையத்தைத் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
15 FEB 2025 1:10PM by PIB Chennai
கிராமப்புற தொழில்நுட்ப நடவடிக்கைக் குழு ஸ்மார்ட் வில்லேஜ் மையத்தின் தொடக்க விழா, சோனிபட்டில் உள்ள மண்டௌரா கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கிராமப்புற தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட், நவீன கிராம அறக்கட்டளையின் நிறுவனர் கொமடோர் ஸ்ரீதர் கோத்ரா, சாலிஸ் காவ்ன் விகாஸ் பரிஷத்தின் தலைவர் திரு. டி.பி. கோயல் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கிராமப்புற தொழில்நுட்ப நடவடிக்கைக் குழு தொடக்க விழாவில் பேசிய பேராசிரியர் அஜய் சூட், கிராமப்புற தொழில்நுட்ப நடவடிக்கைக் குழு ஸ்மார்ட் வில்லேஜ் மையம் கிராமப்புற தேவைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய படியாகும், புதிய கண்டுபிடிப்புகள் அடிமட்ட மக்களைச் சென்றடைவதையும் நமது சமூகங்களின் வாழ்க்கையை மாற்றுவதையும் உறுதி செய்கிறது என்று கூறினார்.
இந்தியாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், இது நிலையான, அளவிடக்கூடிய மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103483
***
PKV/KV
(रिलीज़ आईडी: 2103520)
आगंतुक पटल : 60