பாதுகாப்பு அமைச்சகம்
ஏரோ இந்தியா 2025 இன் போது ஒருங்கிணைந்த தலைமையகப் பாதுகாப்புப் பணியாளர்கள் பிரிவு, உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்துகிறது
Posted On:
14 FEB 2025 6:11PM by PIB Chennai
இந்தியாவின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியா 2025, உலகளாவிய ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய ஈடுபாடுகள், தொழில்நுட்ப காட்சிகள் மற்றும் உத்திசார் ஆலோசனைகளுக்கு ஒரு தளத்தை வழங்கியது. ஒருங்கிணைந்த தலைமையகப் பாதுகாப்புப் பணியாளர்கள் பிரிவு, ஏரோ இந்தியா 2025 இல், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி மேத்யூவின் தலைமையில் வலுவான ராணுவ ராஜதந்திரத்தை வெளிப்படுத்தியது. பாதுகாப்பு புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ராணா மற்றும் பி.பி & எஃப்.டி துணைத் தலைவர் துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் ஆகியோர் அடங்கிய மூத்த இந்திய தூதுக்குழு விரிவான இருதரப்பு கலந்துரையாடல்கள், தொழில்துறை தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு திறன் மதிப்பீடுகளை நடத்தி, இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்தியது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆயுதப் படைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகஸ்டின் எஸ் மலானிட் உடனான லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி மேத்யூவின் சந்திப்பு, ஆழமான இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பின் அவசியத்தையும், பாதுகாப்புக் கொள்முதலில் வாய்ப்புகளை ஆராயவும் வலியுறுத்தியது. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர், இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு, வலுவான இந்திய-இஸ்ரேல் பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார். பாதுகாப்பு நவீனமயமாக்கலுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு விமானங்களின் திறன்கள் மற்றும் செயல்திறன் அளவுருக்கள் பற்றிய விளக்கங்களை அவர் பெற்றார் மற்றும் ஏரோ இந்தியா 2025 இல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்புத் துறையால் காட்சிப்படுத்தப்பட்ட மேம்பட்ட ராணுவ அமைப்புகளின் மதிப்பீடுகளையும் மேற்கொண்டார்.
ஏரோ இந்தியா 2025 இன் போது நடைபெற்ற சந்திப்புகள், வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அர்த்தமுள்ள சர்வதேச கூட்டாண்மைகளை வளர்க்கும் அதே வேளையில், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கான நாட்டின் பார்வையை மேம்படுத்துகின்றன. இந்தக் கலந்துரையாடல்கள் தற்சார்பு, புதுமை மற்றும் வலுவான சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103305
----
RB/DL
(Release ID: 2103426)
Visitor Counter : 29