அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2025-26 பட்ஜெட், எதிர்கால இந்தியாவுக்கான பிரதமர் திரு மோடியின் பார்வையை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
14 FEB 2025 7:10PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் இந்தியாவுக்கான முன்னோக்குப் பார்வையின் பிரதிபலிப்பு என்று பாராட்டியுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய மற்றும் தன்னிறைவு தேசத்திற்கான செயல்திட்டமாக இதை விவரித்த அமைச்சர், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் பங்கை வலியுறுத்தினார். குஜராத் தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டாக்டர். ஜிதேந்திர சிங் பட்ஜெட்டின் அற்புதமான முன்முயற்சிகளைப் பாராட்டினார், குறிப்பாக தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஆற்றல் சுதந்திரத்தில் அதன் கவனத்தை அவர் சுட்டிக் காட்டினார். அணுசக்தித் துறையில் தனியார் துறை பங்கேற்பை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அவர் எடுத்துரைத்தார், இது இந்திய எரிசக்தித் துறையின் மாற்று சக்தியாகும் என்று கூறினார். இந்த நடவடிக்கைகள் எரிசக்தி தன்னிறைவை அடைய உதவுவது மட்டுமல்லாமல், மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியாவை 2047-க்குள் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கி முன்னேற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் எரிசக்தி உத்தியின் மூலக்கல்லாக அணுசக்தியை நிறுவுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். விண்வெளித் துறையை தனியார் பங்கேற்பிற்கு வித்திட்டது, வெற்றியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், அணுசக்தித் துறையில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் வளர்ச்சியையும், புதுமையையும் துரிதப்படுத்தும் என்று கூறினார். பல தசாப்தங்களாக, அணுசக்தித் தொழில் கடுமையான விதிமுறைகளின் கீழ் இயங்கியது, ஆனால் சமீபத்திய கொள்கை மாற்றங்கள் தற்சார்பு இந்தியாவின் பார்வையுடன் இணைந்து, அதிக வெளிப்படைத்தன்மையையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103340
----
RB/DL
(Release ID: 2103417)
Visitor Counter : 20