கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொல்பொருள் ஆய்வு இடங்களில் அழிவில்லாத நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல்

Posted On: 14 FEB 2025 4:53PM by PIB Chennai

உலகின் மிகவும் முக்கியமான கலாச்சார, தொல்பொருள் களஞ்சியத்தின் இருப்பிடங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. கஜூரஹோவில்  உள்ள ஆலயங்கள் முதல் ஹம்பியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிதிலங்கள் வரையிலான வரலாற்றுச் சின்னங்கள் நாட்டின் வளமான வரலாற்றையும் பன்முக பாரம்பரியங்களையும் கட்டடக்கலை ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய இடங்கள் வடக்கே உள்ள இமயமலையிலிருந்து தெற்கே உள்ள குமரிமுனை வரை பரவியுள்ளன. இவற்றைப் பாதுகாக்கவும், ஆய்வு செய்யவும் இந்தியத் தொல்லியல் ஆய்வுப் துறை 1861-ல் தொடங்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் என கருதப்படும் 3,698 வரலாற்றுச் சின்னங்களையும் தொல்பொருள் ஆய்வு இடங்களையும் இந்தத் துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.  2020-21-ல் ரூ.260.90 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.260.83 கோடி செலவிடப்பட்டது.  2023-24-ல் ஒதுக்கீடும் செலவினமும் ரூ.443.53 கோடியாக இருந்தது.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மிக்க இடங்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து பருவநிலை மாற்றத் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதை இந்தத் துறை மேற்கொள்கிறது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஔரங்காபாதில் உள்ள  பிபிகா மக்பாரா ஆகியவற்றில் காற்று மாசு கண்காணிப்பு சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய தொல்பொருள் ஆய்வுப் பிரிவு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து காற்றின் வேகம், மழை அளவு, வெப்பநிலை, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதங்கள் கண்டறிதல் ஆகியவற்றுக்காக  தானியங்கி வானிலை மையங்களை அமைத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103241

------

TS/SMB/KPG/DL


(Release ID: 2103357) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Gujarati