ஜவுளித்துறை அமைச்சகம்
புதுதில்லியில் தொடங்கியுள்ள பாரத் ஜவுளி கண்காட்சியை மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் பார்வையிட்டார்
Posted On:
14 FEB 2025 4:04PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச அளவிலான ஜவுளி கண்காட்சி-2025 இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் பங்கேற்று ஜவுளி ரகங்களை பார்வையிட்டார். மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் 12 ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்புகள் இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலகளவில் ஜவுளித் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள், பிரபல நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளை இந்தக் கண்காட்சி ஈர்த்துள்ளது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103223
***
TS/GK/RR/KR
(Release ID: 2103282)
Visitor Counter : 51