நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீண்டும் லாபம் ஈட்டும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள்

प्रविष्टि तिथि: 13 FEB 2025 8:20PM by PIB Chennai

வரலாற்று ரீதியாக நஷ்டங்களைப் பதிவு செய்து கொண்டிருந்த இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன.

வலுவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி முக்கிய செயல்திறன் குறியீட்டின் அடிப்படையிலான கண்காணிப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் 2019-20 மற்றும் 2021-22 ஆண்டுகளுக்கு இடையே அரசு 17,450 கோடி ரூபாய் மூலதனத்தை வழங்கி இருந்தது.

இந்நிலையில், 2023-24 நிதியாண்டின் 4வது காலாண்டிலும், 2024-25 நிதியாண்டின் 2வது காலாண்டிலும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம்  மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம்  ஆகியவை லாபத்தை ஈட்டியுள்ளன.  யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 7 வருட இடைவெளிக்குப் பிறகு 2024-25 நிதியாண்டின் 3வது காலாண்டில் லாபத்தை ஈட்டியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102941

***

TS/GK/RR/KR

 


(रिलीज़ आईडी: 2103205) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी