கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேபாளம், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள புத்த வழிபாட்டுத் தலங்களுக்கு இரு சக்கர வாகனப் பயணம்

Posted On: 14 FEB 2025 11:18AM by PIB Chennai

நேபாளம், இந்தியா மற்றும் இலங்கையின் புத்த வழிபாட்டுத்தலங்களை இணைக்கும் வகையில், சர்வதேச புத்த கூட்டமைப்பானது பிற பங்குதாரர்கள் அமைப்புகளுடன் இணைந்து இரு சக்கர பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ராகுல் லக்ஷ்மன் பாட்டீலின் தலைமையில், இந்தப் பயணம் பிப்ரவரி 16 அன்று புத்தர் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினி நகரிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகக் கொடியசைத்து துவக்கி வைக்கும் நிகழ்வு  புத்தகயாவில் பிப்ரவர் 19 ஆம் தேதி அன்று  முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும். இது புத்த மதத்தின் வரலாற்றைக் குறிக்கும் வகையிலும், 3 நாடுகளிடையேயான கலாச்சார மற்றும் ஆன்மீக தொடர்புகளை வலுப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

மேலும் புத்தரின் போதனைகள் மூலம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தெற்காசியா முழுவதும் கலாச்சார மற்றும் பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை மக்களிடையே நட்புணர்வை மேம்படுத்தும் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103111

***

TS/GK/RR/KR


(Release ID: 2103189) Visitor Counter : 31