உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உணவு பதப்படுத்துதலை ஊக்குவித்தல்

Posted On: 13 FEB 2025 6:12PM by PIB Chennai

உணவு பதப்படுத்தும் தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், 15-வது நிதி ஆணையத்தின் காலகட்டத்தில்  உணவு பதப்படுத்தும் தொழில்களை மேற்கொள்ளும் தொழில்முனைவோருக்கு கடனுடன் கூடிய நிதியுதவி (மூலதன மானியம்) வழங்குவதற்கு ரூ.5520 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், அதன் திட்டங்களின் கீழ், தனித்தனி குளிர்ப்பதன சேமிப்பு வசதிகளை நிறுவுவதற்கு நிதி உதவி வழங்குவதில்லை. இருப்பினும்,  பிரதமர் விவசாயி நலத் திட்டத்தின் தொடர்புடைய உட்கூறு திட்டங்களின் கீழ் வரும் உணவு பதப்படுத்தல் செயல்திட்டங்களின் ஒரு பகுதியாக குளிர்சாதன சங்கிலித் தொடர் உருவாக்கம், உணவை பாதுகாத்து வைத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது.

வாழைப்பழ பதப்படுத்துதல் உட்பட பல்வேறு வகையான உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைப்பதற்கு வருங்கால தொழில்முனைவோருக்கு அந்தந்த திட்ட வழிகாட்டுதல்களின்படி, அமைச்சகம் நிதி உதவியை வழங்குகிறது.

இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102851

***

TS/GK/AG/DL


(Release ID: 2102926) Visitor Counter : 31


Read this release in: English , Urdu , Hindi