உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
அறுவடைக்குப் பிந்தைய விவசாயிகளுக்கான இழப்புகளைக் குறைக்க உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆதரவு
प्रविष्टि तिथि:
13 FEB 2025 6:14PM by PIB Chennai
பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைப்பதற்காக ரூ.15 கோடி வரை நிதி உதவியை வழங்குகிறது. இது நாட்டில் உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது, விவசாயிகளுக்கு சிறந்த விலைகளை வழங்க உதவுகிறது, குறிப்பாக கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது, விவசாய விளைபொருட்கள் வீணாவதைக் குறைக்கிறது.
தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அல்லாத விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்கும் நோக்கத்துடன் பிரதான் மந்திரி கிசான் சம்பதா திட்டத்தின் அங்கமாக, ஒருங்கிணைந்த குளிர்பதனச் சங்கிலி மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பிற்கான திட்டத்தை, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், செயல்படுத்துகிறது.
இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102853
***
TS/GK/AG/DL
(रिलीज़ आईडी: 2102921)
आगंतुक पटल : 51