புவி அறிவியல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: வானிலை மற்றும் பருவநிலை சேவைகள்
Posted On:
13 FEB 2025 3:56PM by PIB Chennai
வானிலை மற்றும் பருவநிலை சேவைகளை துறைசார்ந்த கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் பருவநிலை மாற்றங்களை ஏற்று தகவமைத்துக் கொள்வதை வலுப்படுத்துவதற்காக இந்திய வானிலை ஆய்வுத்துறை, தேசிய பருவநிலை சேவைகள் சட்ட வரைவை உருவாக்கி செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
விவசாயம், நீர்வளம், சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியமான துறைகளில் முடிவுகள் எடுக்கப்பட இது உதவியாக இருக்கும்.
விவசாயிகளுக்கான வேளாண் ஆலோசனை சேவைகள் வழங்குதல், வெள்ளம் மற்றும் வறட்சி முன்னறிவிப்புக்காக மத்திய நீர் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவை இந்தச் சேவைகளில் அடங்கும்.
வானிலை குறித்த கணிப்புகள், தகவல் தொடர்புகள் மற்றும் முன்னறிவிப்பு அமைப்புகளை அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
புயல்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க புயல் முன்னறிவிப்பு அமைப்புகளில் முன்னேற்றங்களைச் செய்ய புவி அறிவியல் அமைச்சகம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் புயல்கள் குறித்த உயர் துல்லியமான முன்னெச்சரிக்கைகளை வழங்கும் திறனை இந்திய வானிலை ஆய்வுத் துறை நிரூபித்துள்ளது.
மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு வெப்ப அலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைத் தகவல்களை இந்திய வானிலை ஆய்வுத் துறை வழங்குகிறது.
புயல்கள், வெப்ப அலைகள் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க பொதுமக்களுக்கும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கும் பல்வேறு முன்னறிவிப்புகளை வெளியிடுகிறது.
இந்தத் தகவலை மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102746
***
TS/GK/AG/DL
(Release ID: 2102874)
Visitor Counter : 50