சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புற்றுநோய் இல்லாத இந்தியாவை நோக்கி
Posted On:
13 FEB 2025 3:31PM by PIB Chennai
உலகம் முழுவதும் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமான நோய்களில் புற்றுநோயும் ஒன்று. 2022-ம் ஆண்டில், உலக அளவில் 20 மில்லியன் பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9.7 மில்லியன் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக புற்றுநோய் உள்ளது. புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் 1 லட்சம் பேரில் 100 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் புள்ளி விவரப்படி 2023-ம் ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்தவும் மத்திய அரசு சிறந்த கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நோய் தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவ சிகிச்சை, நோயாளிகளை கவனித்தல் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கவும் இந்தக் கொள்கைகள் வழிவகை செய்கின்றன.
மத்திய பட்ஜெட் 2025-26 புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு மொத்தம் ரூ.99,858.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.95,957.87 கோடி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கும் ரூ.3900.69 கோடி சுகாதார ஆராய்ச்சி துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-26-ம் ஆண்டில் 200 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.
புற்றுநோய் மற்றும் இதர அரிய வகை நோய்கள், நாட்பட்ட நோய்கள் ஆகியவற்றுக்கான உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 6 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சலுகையாக 5 சதவீத சுங்கத் தீர்வை விதிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102729
***
TS/PKV/RR/KR
(Release ID: 2102870)
Visitor Counter : 59