சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: ஆசிய சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம்

प्रविष्टि तिथि: 13 FEB 2025 3:01PM by PIB Chennai

ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் சிங்கங்கள் பாதுகாப்பு திட்டம் குஜராத்தில் உள்ள கிர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சிங்கங்களின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும்  சிங்கங்கள் திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்க பாதுகாப்பு திட்ட முயற்சியில் பல்லுயிர் பாதுகாப்பும், உள்ளடங்கியுள்ளது.  குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளபடி ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதன்படி 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள  எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102700

***

TS/GK/AG/KR


(रिलीज़ आईडी: 2102777) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu