சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகளை நிர்வகித்தல்

Posted On: 13 FEB 2025 3:02PM by PIB Chennai

பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மின்னணு உபகரணங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் நாளுக்கு நாள் மின் கழிவுகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

மின் கழிவுகளால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளிலிருந்து சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில் மின் கழிவு (மேலாண்மை) விதிகள், கடந்த 2023 ஏப்ரல்  முதல் அமலில் உள்ளது.

இந்தப் புதிய விதிகள், உகந்த முறையில் மின் கழிவுகளை நிர்வகிக்கவும், மின் கழிவு மறுசுழற்சிக்கான உற்பத்தியாளர் பொறுப்பை அமல்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் அனைத்து உற்பத்தியாளர், தயாரிப்பாளர், புதுப்பிப்பவர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களும் பதிவு செய்ய வேண்டும்.

2022-ம் ஆண்டு மின் கழிவு (மேலாண்மை) விதி 10(1) இன் கீழ், தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் தொழில் பூங்கா, தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் மின் கழிவுகளை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் இடம் ஒதுக்குவதை உறுதி செய்யும் பொறுப்பு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள  எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102701

***

TS/GK/AG/KR


(Release ID: 2102775) Visitor Counter : 24