ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது- மத்திய ஆயுஷ் இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்

Posted On: 13 FEB 2025 1:51PM by PIB Chennai

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டு பிரிவில் ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே 2025 ஜனவரி 25-ம்  தேதி புதுதில்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோனேசியாவின் அதிபர் திரு. பிரபோவோ சுபியாண்டோ முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த  மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், இது உலகத்தரம்  வாய்ந்தது எனக் கூறினார்.

"பாரம்பரிய மருந்துகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இதன் மூலம், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் அதிகளவில் தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102672

***

TS/GK/AG/RR


(Release ID: 2102719) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi , Bengali