தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெறவுள்ள சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணி பற்றிய முதலாவது பிராந்திய பேச்சுவார்த்தையை மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கவிருக்கிறார்
Posted On:
12 FEB 2025 5:41PM by PIB Chennai
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ)-இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு (இ.எஃப்.ஐ) உடன் இணைந்து 2025 பிப்ரவரி24, 25 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சமூக நீதிக்கான முதலாவது பிராந்திய பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. இந்த முக்கிய நிகழ்வு சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணிக்கு இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமையும்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமிகு ஷோபா கரந்த்லாஜே மற்றும் செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு), திருமதி. சுமிதா தவ்ரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் கலந்துகொள்வார்கள். இந்நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் திரு.கில்பர்ட் எப்.ஹோங்போ சிறப்புரையாற்றவுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2023 இல் தொடங்கப்பட்ட, இந்தக் கூட்டணி, அரசுகள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள், சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டு வங்கிகள், நிறுவனங்கள், அரசு சாரா சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் சமூக நீதியை முன்னேற்றுவதற்கும், பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் ஒரு தளமாகும். கூட்டணி, ஒவ்வொரு பங்கேற்பாளரின் தனித்துவமான பலங்களை அதிகரிக்க கூட்டாளர்களுக்கிடையில் ஒத்துழைப்பை பயன்படுத்துகிறது, சமூக நீதி சவால்களை முழுமையாகவும் தெளிவாகவும் எதிர்கொள்கிறது.
ஆசிய பசிபிக் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராக, சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியின் கீழ் முதல் 'பிராந்திய உரையாடலை' இந்தியா முன்னெடுத்து வருகிறது மற்றும் "உற்பத்தி மற்றும் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் நிலையான நிறுவனங்களுக்கான அணுகல் மற்றும் திறன்களை விரிவுபடுத்துதல்" என்ற கூட்டணியின் கருப்பொருளின் கீழ் "உள்ளடக்கிய மற்றும் நிலையான சமூகங்களுக்கான பொறுப்பான வணிகங்கள்" என்ற முக்கிய தலையீட்டை முன்னெடுத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102377
***
(Release ID: 2102377)
RB/DL
(Release ID: 2102519)
Visitor Counter : 37