புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூர்யமின் உற்பத்தி திட்டத்தின் ஓராண்டு நிறைவு
Posted On:
12 FEB 2025 12:48PM by PIB Chennai
பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூர்யமின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டு 2025 பிப்ரவரி 13 அன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இது குறைந்த கட்டணத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய வீடுகளை கட்டவும் அவற்றை மேம்படுத்தி, நிலையான எதிர்காலத்திற்கான இந்தியாவின் மாற்றத்தை துரிதப்படுத்திய ஒரு ஆண்டைக் கொண்டாடுகிறது. 2024 பிப்ரவரி 13, அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இந்தப் புதிய முயற்சி, வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி தகடுகளை நிறுவுவதன் மூலம் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய முயற்சியான இத்திட்டம், 2027 மார்ச் மாதத்திற்குள் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தி வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது.
2025 ஜனவரி 27 வரை, இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 8.46 லட்சம் வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாதாந்திர நிறுவல் விகிதம் பத்து மடங்கு அதிகரித்து சுமார் 70,000 மின்தகடுகள் நிறுவப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு 40% வரை மானியம் அளிக்கப்படுகிறது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மிகவும் குறைந்த கட்டணத்துடனும் அணுகக்கூடிய தாகவும் மாற்றுகிறது. இதுவரை, 5.54 லட்சம் குடியிருப்பு நுகர்வோருக்கு ரூ.4,308.66 கோடி மத்திய நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு வீட்டிற்கு ரூ.77,800 மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக, பயனாளிகளில் 45% பேருக்கு தற்போது அவர்களின் சூரிய மின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளைப் பொறுத்து பூஜ்ஜியம் என்ற அளவில்தான் அவர்களுக்கு மின்சாரக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
வீடுகளுக்கான இலவச மின்சாரம்: இந்தத் திட்டம் மானிய விலையில் வீடுகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை நிறுவுவதன் மூலம் இலவச மின்சாரத்தை வழங்குகிறது. இது எரிசக்திக்கான செலவுகளைக் கணிசமாகக் குறைக்கிறது.
அரசுக்கு ஏற்பட்டுள்ள குறைந்த மின்சார செலவுகள்: சூரிய சக்தியின் பரவலான பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், இந்தத் திட்டம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.75,000 கோடி மின்சாரச் செலவை சேமிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அதிகரித்த பயன்பாடு: இந்தத் திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது. இது இந்தியாவில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி கலவையை உருவாக்க பங்களிக்கிறது.
குறைக்கப்பட்ட கரியமில வாயு உமிழ்வு: இந்தத் திட்டத்தின் கீழ் சூரிய சக்திக்கு மாறுவது கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்க உதவும். இது இந்தியாவின் கரியமில வாயு உமிழ்வை குறைப்பதற்கான உறுதிப்பாட்டை ஆதரிப்பதாக அமையும்.
மானிய விண்ணப்பம் மற்றும் விற்பனையாளர் தேர்வு: குடும்பங்கள் தேசிய இணையதளம் மூலம் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதில் அவர்கள் சூரிய மின்சக்தி உற்பத்தி தகடுகளை நிறுவுவதற்கு பொருத்தமான விற்பனையாளரையும் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102149
***
TS/IR/AG/KR
(Release ID: 2102311)
Visitor Counter : 22