சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி:மாற்றுத்திறனாளிகள் அணுகி பயன்படுத்துவதற்கான வசதிகள்

Posted On: 11 FEB 2025 1:50PM by PIB Chennai

பொதுப் போக்குவரத்து அமைப்புகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகிப் பயன்படுத்த பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 35 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் 55 உள்நாட்டு விமான நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வுதளங்கள், சிறப்பு வசதி கழிப்பறைகள், மின்தூக்கி வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 709 முக்கிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள், சிறப்பு நடைபாதைகள், வாகனம் நிறுத்துமிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட குறுகிய கால வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் 8695 பேருந்துகளில் முழுமையான சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும்அவர்கள் எளிதில் அணுகும் வகையில் 3120 பேருந்து நிலையங்கள்  மாற்றப்பட்டுள்ளன.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சொந்தமான அரசு கட்டிடங்களில் சிறப்பு வசதி ஏற்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுப்பணித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு சொந்தமான 211 கட்டிடங்களும் பிற துறைகள்/அமைச்சகங்களின் 889 கட்டிடங்களும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திரு பி.எல். வர்மா மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101662

***

TS/GK/RJ/KR


(Release ID: 2101876) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi