ஆயுஷ்
மஹாகும்ப மேளா 2025: பிரயாக்ராஜில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது; எய்ம்ஸ், பனராஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்
Posted On:
10 FEB 2025 7:13PM by PIB Chennai
மஹாகும்பமேளா 2025-ல் யாத்ரீகர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் மேளா நிர்வாகம் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. பொதுவான நோய்கள் முதல் சிறப்பு சிகிச்சைகள் வரை, விரிவான சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. இதுவரை, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளை உலகத் தரமானதாக மாற்ற, கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், தில்லி எய்ம்ஸ் மற்றும் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐ.எம.எஸ். மருத்துவர்களுடன் இணைந்து களத்தில் அயராது உழைத்து வருகின்றனர்.
கும்பமேளாவின் பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் கௌரவ் துபே, 23 அலோபதி மருத்துவமனைகளில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 3.71 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் நோயியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பகிர்ந்து கொண்டார். கூடுதலாக, 3,800-க்கும் மேற்பட்ட சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் 12 பெரிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
2.18 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் ஆயுஷ் மருத்துவத்தால் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச ஆயுஷ் சங்கத்தின் ஒத்துழைப்புடன், 20 ஆயுஷ் மருத்துவமனைகள் (10 ஆயுர்வேதம் மற்றும் 10 ஹோமியோபதி) கும்பமேளா பகுதியில் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. இன்றுவரை, 2.18 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளால் பயனடைந்துள்ளனர். தில்லியில் உள்ள எய்ம்ஸ் ஆயுர்வேதத்தின் நிபுணர்கள், பனராஸ் இந்து பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் வி.கே. ஜோஷி, கனடாவைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பல மருத்துவ நிபுணர்கள் உட்பட கும்பமேளாவில் யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101469
***
TS/IR/RJ/DL
(Release ID: 2101529)
Visitor Counter : 28