சுற்றுலா அமைச்சகம்
மகா கும்பமேளா, 2025
प्रविष्टि तिथि:
10 FEB 2025 5:15PM by PIB Chennai
பல்வேறு முயற்சிகள் மூலம் மகா கும்பமேளா 2025 ஐ சுற்றுலா அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஊடகங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈடுபடுத்தவும், தகவல்களை வழங்கவும் மேளா பகுதியில் வியத்தகு இந்தியா அரங்கை அமைச்சகம் அமைத்துள்ளது.
புதிய படைப்புகள், பல்வேறு சுற்றுலா தொகுப்புகள், விமான வாய்ப்புகள், உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஐ.ஆர்.சி.டி.சி, விமான நிறுவனங்கள் போன்றவற்றால் வழங்கப்படும் தங்குமிட விருப்பங்கள் ஆகியவை அடங்கிய டிஜிட்டல் கையேடு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக மகா கும்பமேளா சுற்றுலா தகவல் தொலைபேசி (1800111363) சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்கள் மூலமாகவும் மகா கும்பமேளாவை சுற்றுலா அமைச்சகம் விளம்பரப்படுத்துகிறது.
சுற்றுலா அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி) பிரயாக்ராஜில் உள்ள டென்ட் சிட்டியில் 80 சொகுசு கூடார தங்குமிடங்களை அமைத்துள்ளது.
கலாச்சார அமைச்சகம்,ஒரு கலாச்சார கிராமத்தை உருவாக்கியுள்ளது. வட மத்திய மண்டல கலாச்சார மையம் மூலம் மேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கலகிராமத்தில், அனுபூத மண்டபம், கலைஞர்களின் நிகழ்ச்சிகள், உணவுப பிரிவு, பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி காட்சி மற்றும் விற்பனை போன்றவை இடம்பெற்றுள்ளன.
சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஒழுங்கமைத்தல், மேம்படுத்துதல் முதலியவை மாநில அரசின் பொறுப்புகள் ஆகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101360
***
RB/DL
(रिलीज़ आईडी: 2101523)
आगंतुक पटल : 36