பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய பாதுகாப்புத் தளவாட சூழல்சார் அமைப்பின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்றைய சவால்களுக்கு தீர்வு காணுமாறு உலகளாவிய அசல் கருவி உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்
Posted On:
10 FEB 2025 5:30PM by PIB Chennai
இந்திய பாதுகாப்பு தளவாட சூழல்சார் அமைப்பின் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், இன்றைய நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக எழும் சவால்களுக்கான தீர்வுகளுக்கும், எதிர் நடவடிக்கைகளைக் கண்டறியவும் உலகளாவிய அசல் கருவி உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். பிப்ரவரி 10, அன்று கர்நாடகாவின் பெங்களூருவில் ஏரோ இந்தியா 2025-ன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பலவீனமான உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில், தொடர்ந்து தீர்வுகளை ஏற்றுக்கொண்டு மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
தற்போது இராணுவ நடவடிக்கைகளில் தொடர்பு மற்றும் தரவு பகிர்வின் தன்மை மிகவும் சிக்கலாகவுள்ளதாக அவர் தெரிவித்தார். விண்வெளி அடிப்படையிலான செயல்பாட்டு அமைப்புகள், தொடர்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை நம்பியிருப்பது ஆகியவை நமது செயல்பாட்டு திட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பதாக தெரிவித்தார். நமது பாதுகாப்பு தளவாட உற்பத்தி வளர்ந்து வரும் சவால்களுக்கான எதிர் நடவடிக்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தளவாட தொழில்துறை வழித்தடங்களில் தொழில்துறை நிறுவனங்களை அமைப்பதற்காக இதுவரை 250-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார். பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுத்ததற்கான சான்றாக, 2013-14-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் தளவாடங்களின் ஏற்றுமதியில் இந்தியா 31 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101387
***
TS/IR/RJ/RR
(Release ID: 2101425)
Visitor Counter : 54