பாதுகாப்பு அமைச்சகம்
பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ல் இந்திய பாதுகாப்பு தளவாட கண்காட்சி மற்றும் கர்நாடகா அரங்குகளைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
Posted On:
10 FEB 2025 4:18PM by PIB Chennai
கர்நாடகாவின் பெங்களூருவில் 2025 பிப்ரவரி 10 அன்று ஏரோ இந்தியா 2025-ல் இந்தியா, பாதுகாப்பு தளவாட கண்காட்சி மற்றும் கர்நாடகா அரங்குகளைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அதிநவீன தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்களின் வடிவமைப்பு, மேம்பாடு, புதுமை மற்றும் உற்பத்தித் திறன்களை இந்திய அரங்கு காட்சிப்படுத்துகிறது. இது முப்படை சேவைகள் மற்றும் விண்வெளித் துறைக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும், உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு சக்தியாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தையும் குறிக்கிறது. கண்காட்சியைத் தொடங்கி வைத்தபிறகு, பாதுகாப்பு அமைச்சர், அரங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டு, நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடி, அவர்களின் தயாரிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்திய அரங்கில், நாட்டின் முழுமையான பாதுகாப்பு சூழல் குறித்து 275-க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
கர்நாடகா அரங்கம் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தொழில்களின் அதிநவீன தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறது. இந்த கண்டுபிடிப்புகள் கர்நாடகாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் வலுவான சூழல் அமைப்பை எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு 2,000-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆதரவு அளிக்கின்றன. கர்நாடக துணை முதலமைச்சர் திரு டி.கே. சிவகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101326
***
TS/IR/RJ/RR
(Release ID: 2101418)
Visitor Counter : 43