உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
இந்தியாவில் உணவு பதனப்படுத்துதல் மற்றும் சேமிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
Posted On:
10 FEB 2025 1:02PM by PIB Chennai
பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நவீன உள்கட்டமைப்பு வசதியுடன் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து சில்லரை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்வதற்கான விநியோகச் சங்கிலியை மேம்படுத்தப்படுத்துவது என்பது நாட்டின் உணவுப் பதனப்படுத்துதல் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும். இத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் அத்துறையின் திறனை மேம்படுத்துவதுடன் விவசாயிகளுக்கு சிறந்த முறையில் வருவாயும் ஈட்ட உதவிடும். இத்திட்டம் குறிப்பாகக் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். மேலும் வேளாண் கழிவுகளைக் குறைக்கவும், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் வகை செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும், குளிரூட்டப்பட்ட வசதியடன் கூடிய கிடங்குகளின் பயன்பாட்டிற்கு 2017-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தெலங்கானாவில் ஒருங்கிணைந்த குளிரூட்டப்பட்ட கிடங்கு மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உள்கட்டமைப்பு வசதிக்கான துணைத் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்கு பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனிப்பட்ட குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை 59 ஆக உள்ளது. இதன் மூலம் 10.6 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சேமிக்க முடியும்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பதனப்படுத்துதல் தொழில்கள் இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101244
----
TS/SV/KPG/RR
(Release ID: 2101296)
Visitor Counter : 39