இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
முதலாவது பிம்ஸ்டெக் இளைஞர் உச்சி மாநாடு - காந்திநகரில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
Posted On:
08 FEB 2025 9:25PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இளைஞர் விவகாரங்கள் துறை, முதலாவது பிம்ஸ்டெக் இளைஞர் உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வை குஜராத் மாநிலம் காந்திநகரில் நடத்தியது. இந்த உச்சி மாநாட்டு, இளைஞர் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே இளைஞர்கள் தலைமையிலான முன்முயற்சிகளை பரிமாறிக் கொள்ளவும் உதவும். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இந்த அமர்வு நடைபெற்றது.
தொடக்க விழாவில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், இளைஞர் நலன் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் மாண்டவியா தமது உரையில், நெகிழ்திறன் கொண்ட, வளமான, இணைக்கப்பட்ட பிம்ஸ்டெக் சமூகத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகளில் 1.8 பில்லியன் மக்கள் தொகை உள்ளதாகவும் அதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்கள் என்றும் எடுத்துரைத்த அவர், வேகமான வளர்ச்சி சூழலில் திறன் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். திறன் இந்தியா இயக்கம், தேசிய கல்விக் கொள்கை 2020, பிரதமர் உள்ளகப் பயிற்சித் திட்டம் போன்ற முன்முயற்சிகளை சுட்டிக் காட்டினார்.
****
PLM/KV
(Release ID: 2101109)
Visitor Counter : 33