பாதுகாப்பு அமைச்சகம்
தென்மேற்கு விமானப்படை தளபதிகள் மாநாடு காந்திநகரில் நடைபெற்றது
Posted On:
08 FEB 2025 8:49PM by PIB Chennai
காந்திநகரில் உள்ள தென்மேற்கு விமான காமாண்டிங் தலைமையகத்தில் 2025 பிப்ரவரி 05 முதல் 07 வரை நடைபெற்ற வருடாந்திர தென்மேற்கு விமான தளபதிகள் மாநாட்டில் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் கலந்து கொண்டார். அவரை தென்மேற்கு விமானப்படை கமாண்டின் தலைமை கமாண்டிங் அதிகாரி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி வரவேற்றார், விமானப்படை தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தென்மேற்கு விமானப்படை தளபதிகளின் செயல்பாட்டு தயார்நிலையை ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் ஆய்வு செய்து, எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள மிக உயர்ந்த செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்வதற்காக அனைத்து பணியாளர்களையும் பாராட்டினார்.
விமானப்படை தளபதி தனது உரையில், கமாண்டின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். திறன் மேம்பாட்டை வலியுறுத்திய அவர், சுறுசுறுப்பான, தகவமைத்துக் கொள்ளும் மற்றும் தீர்க்கமான வான்வெளி சக்தியாக இந்திய விமானப்படை கோட்பாட்டின் உணர்வை அனைத்து பணியாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விமான இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு உகந்த சூழலையும், ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமநிலையையும் பராமரிப்பதற்கான முயற்சிகளைத் தொடருமாறு அனைத்து தளபதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார். ராணுவ விமானப் போக்குவரத்தில், குறிப்பாக விண்வெளி, சைபர் மற்றும் மின்னணு போர் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். அக்னிவீர்வாயு தேர்வுகளின் மூலம் இந்திய விமானப்படைக்குத் தேர்வு செய்யப்படுபவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வழிகாட்டுவதன் மூலம் அவர்களை சீராக ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை விமானப்படை தளபதி மீண்டும் வலியுறுத்தினார்.
தரங் சக்தி-24 பயிற்சியின் போது தளபதிகளின் முயற்சிகளை விமானப்படை தளபதி பாராட்டினார்.மேலும், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க செயல்திறனுக்காக அவர் நிலையங்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2101070®=3&lang=1
**************
BR/KV
(Release ID: 2101107)
Visitor Counter : 24