ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வேயில் பணியமர்த்தல் ஊக்குவிப்பு: கடந்த பத்தாண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டன, வருடாந்திர காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது

Posted On: 07 FEB 2025 6:58PM by PIB Chennai

இந்திய ரயில்வேயின் அளவு, இடஞ்சார்ந்த விநியோகம் மற்றும் செயல்பாட்டின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். தொடர் இயக்கம், தொழில்நுட்ப மாற்றங்கள், இயந்திரமயமாக்கல் மற்றும் புதுமையான நடைமுறைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப போதுமான மற்றும் தகுந்த பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப ரயில்வே, பணியமர்த்தல் முகமைகளுடன் தேவைப்பட்டியலை அளிப்பதன் மூலம் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கோவிட் 19 காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், 2020 முதல் 2022 வரை 2.37 கோடிக்கும் அதிகமான தேர்வர்களை உள்ளடக்கிய இரண்டு முக்கிய தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளின் அடிப்படையில் ரயில்வேயில் 130581 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரயில்வே பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகள்  இயல்பாகவே மிகவும் தொழில்நுட்பமானவையாகும். இது பெரிய அளவிலான  பணியாளர்கள் மற்றும் வளங்களை அணிதிரட்டுதல் மற்றும் மனிதவளத்தின் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. ரயில்வே இந்த சவால்கள் அனைத்தையும் சமாளித்து, அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வெளிப்படைத்தன்மையுடன்  பணியமர்த்தலை வெற்றிகரமாக நடத்தியது. முழு செயல்முறையிலும் காகிதக் கசிவு அல்லது அதுபோன்ற முறைகேடு எதுவும் நிகழவில்லை.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100785

 

***

RB/DL


(Release ID: 2100917) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi