ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் (கிராமம்), இலக்குகளை அடைதல்
Posted On:
07 FEB 2025 4:28PM by PIB Chennai
"அனைவருக்கும் வீடு" என்ற நோக்கத்தை அடைவதற்காக, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஏப்ரல் 1, 2016 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை(கிராமம் )செயல்படுத்தி வருகிறது. இது மார்ச் 2024-ம் ஆண்டுக்குள் 2.95 கோடி தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் உதவி வழங்குவது இலக்கு ஆகும். 31.03.2024 நிலவரப்படி, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அனைத்து வீடுகளும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக இத்திட்டத்தின் கீழ், 2 கோடி வீடுகள் கட்டுவதற்காக முன்மொழிவை 2024-25 இல் இருந்து 2028-29 வரையான காலகட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. 2024-25-ம் ஆண்டில் அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய 18 மாநிலங்களுக்கு 84,37,139 வீடுகளை கட்டுவதற்கான இலக்குகளை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
02.02.2025 நிலவரப்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 3.79 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அவற்றில் 3.34 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் 2.69 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை கிராமப்புற மேம்பாட்டு இணையமைச்சர் திரு டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100662
***
TS/PKV/RJ/DL
(Release ID: 2100794)
Visitor Counter : 48