சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மனநலத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
07 FEB 2025 1:55PM by PIB Chennai
அரசு 2022 அக்டோபர் 10 அன்று "தேசிய தொலை மனநலத் திட்டத்தை" தொடங்கியது, இது 24 x 7 தொலை மனநல ஆலோசனை சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது .சமமான, அணுகக்கூடிய, செலவு அதிகம் அல்லாத மற்றும் தரமான மனநலப் பராமரிப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும். மாவட்ட மனநலத் திட்டத்தின் டிஜிட்டல் பிரிவாக இது செயல்படும். இதற்காக, நாடு முழுவதும் ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் (14416) அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் 24x7 தொலைதூர மனநல வசதியை அமைப்பதன் மூலம், இந்தியா முழுவதும், எந்த நேரத்திலும் மனநலச் சேவைகளை எவரும் பெற முடியும்.
03.02.2025 நிலவரப்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மொத்தம் 53 தொலை ஆலோசனை மையங்களை அமைத்துள்ளன. மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியை அடிப்படையாகக் கொண்டு இச் சேவை வழங்கப்படுகிறது.ஸ20 மொழிகளில் இந்தச் சேவைகள் கிடைக்கின்றன. ஹெல்ப்லைன் எண்ணில் 18,13,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் கையாளப்பட்டுள்ளன.
2022-23, 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டுகளுக்கான தேசிய தொலை மனநலத் திட்டத்திற்கு முறையே ரூ. 120.98 கோடி, ரூ. 133.73 கோடி மற்றும் ரூ. 90.00 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக மனநல தினமான 2024 அக்டோபர் 10 அன்று அரசு தொலை ஆலோசனை மையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டெலி-மனாஸ் மொபைல் செயலி என்பது நல்வாழ்வு முதல் மனநலக் கோளாறுகள் வரையிலான மனநலப் பிரச்சினைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விரிவான மொபைல் தளமாகும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100593
***
TS/PKV/RJ/RR
(Release ID: 2100703)
Visitor Counter : 49