சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் சுகாதார உள்கட்டமைப்பு நிலை குறித்த அண்மைத் தகவல்
Posted On:
07 FEB 2025 1:59PM by PIB Chennai
இந்தியாவின் சுகாதார இயக்கவியல் (உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள்), 2022-23 என்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட சுகாதார நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படட் ஒரு வருடாந்திர வெளியீடாகும். இதில் நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கட்டப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார மையங்கள், துணை மையங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சிறந்த சேவை வழங்கலை ஊக்குவிப்பதற்காக மருத்துவ நிபுணர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் கௌரவ ஊதியம் வடிவில் மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.
நகர்ப்புற சுகாதார அமைப்பை வலுப்படுத்த, தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் 2013-ம் ஆண்டு தேசிய சுகாதார இயக்கத்தின் துணைப் பணியாகத் தொடங்கப்பட்டது. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள், நடமாடும் மருத்துவ அலகுகள், ஆஷாக்கள், 24 x 7 சேவைகள் மற்றும் முதல்நிலை பரிந்துரை வசதிகள், பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம், இலவச நோயறிதல் சேவை மற்றும் இலவச மருந்துச் சேவை, இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள், இரத்த சோகை இல்லாத இந்தியா உத்தி, பிரதமரின் காசநோய் தடுப்பு இயக்கம் மற்றும் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் ஆகியவை நகர்ப்புறங்கள் உட்பட நாட்டில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளாகும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100595
***
TS/PKV/RJ/RR
(Release ID: 2100699)
Visitor Counter : 50