நிதி அமைச்சகம்
நடப்பு நிதியாண்டு 2024-25-ன் முதல் 3 காலாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது
Posted On:
06 FEB 2025 7:40PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டு 2024-25-ன் முதல் 3 காலாண்டுகளில் முக்கியமான நிதி சார்ந்த செயல்பாடுகளில் பொதுத்துறை வங்கிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. 31.12.2024 நிலவரப்படியான சிறப்பம்சங்கள் வருமாறு:-
- இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த செயல்பாட்டு லாபம் ரூ.2,02,243 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,29,426 கோடியாகவும் இருந்தது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு லாப அதிகரிப்பு 31.3 சதவீதமாக இருந்தது.
- பொதுத்துறை வங்கிகளின் மொத்த வணிகம் ரூ.242.27 லட்சம் கோடியை எட்டியது. இது சென்ற ஆண்டை விட 11 சதவீதம் கூடுதலாகும்.
- ஒட்டுமொத்த கடன் வழங்கும் வளர்ச்சி 12.4 சதவீதமாக இருந்தது. இது 16.6 சதவீத சில்லரை கடன் அதிகரிப்புக்கும், 12.9 சதவீத வேளாண் கடன் அதிகரிப்புக்கும், 12.5 சதவீத எம்எஸ்எம்இ கடன் அதிகரிப்புக்கும் வழிவகுத்தது.
***
(Release ID: 2100412)
TS/SMB/AG/RR
(Release ID: 2100607)
Visitor Counter : 46