கலாசாரத்துறை அமைச்சகம்
கும்பமேளாவை விளம்பரப்படுத்துதல்
Posted On:
06 FEB 2025 5:50PM by PIB Chennai
கும்பமேளா, 2025 உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 13.01.2025 முதல் 26.02.2025 வரை அம்மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், தகவல்களை வழங்கவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஊடகங்களுக்கு உதவவும், மேளா பகுதியில் வியத்தகு இந்தியா அரங்கை அமைத்துள்ளது. மகா கும்பமேளாவுக்கான பல்வேறு சுற்றுலா தொகுப்புகள், விமானம் மற்றும் தங்குமிட வாய்ப்புகள் உள்ளிட்டவற்றின் டிஜிட்டல் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக மகா கும்பமேளா சுற்றுலா தகவல் தொலைபேசி எண்ணும் (1800111363) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சமூக ஊடக கையாளுதல்கள் மூலமாகவும் கும்பமேளா விளம்பரப்படுத்தப்படுகிறது.
சுற்றுலா அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (ஐ.டி.டி.சி), பிரயாக்ராஜில் உள்ள டென்ட் சிட்டியில் தங்குவதற்காக 80 சொகுசு கூடாரங்களை அமைத்துள்ளது.
மகா கும்பமேளா 2025 க்காக 3,000 சிறப்பு ரயில்கள் உட்பட 13,000 க்கும் மேற்பட்ட ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கி வருகிறது. இது தவிர, பிரயாக்ராஜை அயோத்தி, வாரணாசி மற்றும் சித்ரகூட் போன்ற முக்கிய மத தலங்களுடன் இணைக்கும் ரிங் ரெயில் சேவைகளும் மேளாவின் போது தினசரி அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.
77 நாடுகளைச் சேர்ந்த தூதரகத் தலைவர்கள் உட்பட 118 பேர் கொண்ட தூதுக்குழு 2025 பிப்ரவரி 1 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது. மகா கும்பமேளாவின் பல்வேறு கட்டங்களில் 15,000 கலைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்க கலாச்சார அமைச்சகம் உத்தரப்பிரதேச அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100362
***
RB/DL
(Release ID: 2100492)
Visitor Counter : 30