பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊழலை ஒருபோதும் சகித்துகொள்ள முடியாது என்பதில் மத்திய அரசு உறுதி – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2025 3:42PM by PIB Chennai

ஊழலை  ஒருபோதும் சகித்துகொள்ள முடியாது  என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்று அவர் அளித்துள்ள பதிலில், அரசின்  நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை வரவு வைத்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வெளிப்படையான முறையில் வழங்குதல், மின்னணு முறையில் பொது கொள்முதல் டெண்டரை செயல்படுத்துதல், அரசின் மின்னணு சந்தை மூலம் கொள்முதல்  செய்தல் உள்ளிட்டவை அடங்கும்.

மத்திய அரசின் குரூப் 'பி' (அதிகாரப்பூர்வமற்ற அதிகாரி பணியிடம்) மற்றும் குரூப் 'சி' பதவிகளுக்கான ஆட்கள் சேர்ப்பில் நேர்காணல் நடவடிக்கையை நிறுத்துதல், ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான நடைமுறையில் குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்குவதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளுதல், திருத்தி அமைக்கப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை  ஊழல்களைத் தடுக்க உதவும் என்றும்  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100256

***

TS/GK/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2100434) வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी