பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பூட்டான் ராணுவ தலைமை செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங் இந்தியப் பயணத்தை நிறைவு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2025 4:59PM by PIB Chennai

பூட்டானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்  வகையில் பூட்டான் ராணுவ தலைமைச் செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங் கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தார்.

புதுதில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவத் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை அவர் சந்தித்தார். பாதுகாப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ராணுவப் பயிற்சி மற்றும் தளவாட ஆதரவு உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையம்  மற்றும் பௌத்த மடங்களையும் அவர் பார்வையிட்டார்.

பூட்டானுக்குச் செல்வதற்கு முன், கொல்கத்தாவில் உள்ள இந்திய ராணுவத்தின் கிழக்குக் கட்டளைத் தலைமையகத்தை அவர் பார்வையிட்டார். கிழக்குப் படைத் தலைமைத் தளபதியைச் சந்தித்து, பயிற்சி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மூத்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். லெப்டினன்ட் ஜெனரல் பட்டூ ஷெரிங் இன்று தமது இந்தியப் பயணத்தை நிறைவு செய்தார்.

***

TS/GK/AG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2100425) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी